விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “விசிகவின் 234 தொகுதி மாவட்டங்களுக்கு வருகின்ற 2027 ஜனவரி மாத இறுதி வாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்த திட்ட மிட்டுள்ளோம்.
மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சமூக நீதித்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் அயலாக உயர்கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கியது குறித்து குறிப்பிட்டார். ஏற்கனவே தேர்வு செய்த 93 மாவட்டத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளோம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவப்படும் மைல்கற்களில் இந்தி மொழி கட்டாயமாக இடம்பெற்று வருவது அதிர்ச்சியளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தகவல்கள் இடம்பெற வேண்டும் என அதிகாரிகள் கூறி, நெடுஞ்சாலைகளில் இந்தி எழுத்துகளையும் சேர்த்து வருகின்றனர். தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைக் கொண்ட மாநிலம். அதற்கான சட்டமும் நடைமுறையில் உள்ளது. எனவே, மாநில அரசின் கொள்கை மற்றும் சட்டத்தைப் பின்பற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே மைல்கற்களில் தகவல்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், மைல்கற்களில் இடம்பெற்றுள்ள இந்தி எழுத்துகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான நியமனங்களில் சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் சமூகநீதியையும் இடஒதுக்கீட்டு முறையையும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான வைகோ விமர்சனத்திற்கு பதில் அளித்தவர்,
வைகோ விமர்சித்திருக்கிறார் என்று நாங்கள் கருதவில்லை மூத்தவர் என்ற முறையில் அறிவுரை சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய விவரங்களை உள்ளிட்ட கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிட்டு வருவதாக அவ்வாறு பதிவிட்டவர்களுக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறது.
காவேரியில் அணைக்கட்ட வாய்ப்பு இல்லை கர்நாடகா முதலமைச்சர் அரசியல் செய்கிறார். தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் காவேரி நடுவே அணைகட்ட இயலாது. காவேரி விவகாரத்தில் அரசியலுக்காக பேசப்படும் விவாதங்கள் தான். காவேரி விவகாரத்தில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு தவறு நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.




