திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களில் பொதுமக்கள் பிரச்னைகளை தீர்ப்பதாக கூறுவது சாத்தியமில்லை என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக அரசியலில் இரு பெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது எனக்கூறிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களில் பொதுமக்கள் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் எனக் கூறுவது சாத்தியமில்லை எனக்கூறிய அவர், தேர்தலுக்காக அளிக்கப்படும் வாக்குறுதி தான் இது எனவும் சரத்குமார் விமர்சனம் செய்தார்.







