பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு திடீர் சந்திப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு சந்தித்து திடீர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று நடைபெறும் பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தேர்தல்…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு சந்தித்து திடீர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இன்று நடைபெறும் பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய முடிவு எடுப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, அவரது இல்லத்திற்கு சென்ற அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்றிரவு சந்தித்தனர்.

வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு கோரி பாமக பலகட்ட போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை, அமைச்சர்கள் மூன்றாம் கட்டமாக சந்தித்து பேசியுள்ளனர். தங்கள் கூட்டணியில் உள்ள பாமக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியில் நீடிப்பதற்காக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply