தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசாக, திமுக அரசு அமைந்திடும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாகம் பகுதியில்,உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதி கூறினார்.
திமுக ஆட்சியில் இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை எனக்கூறிய அவர், மத்திய அரசுக்கு அடிபணிந்து அதிமுக அரசு நீட் நேர்வை அனுமதித்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும், மக்கள் விரும்பும் அரசாக தமிழகத்தில் திமுக அரசு விரைவில் அமையும் எனவும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.







