நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரச் சொல்லி அவரது ரசிகர்கள் மேலும் மேலும் காயப்படுத்துவது நியாயமல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேல்
தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது கனவில்தான் அமையும் எனக் கூறினார். இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் கோட்பாட்டை தான் ஏற்பதாகவும் சீமான் தெரிவித்தார்.







