பொங்கல் பண்டிகை; சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தமிழக அரசு 3 நாட்கள் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் மெரினா…

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தமிழக அரசு 3 நாட்கள் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு வரும் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்திலுள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னை கிண்டியில் உள்ள தேசிய பூங்காவிற்கு செல்லவும் 15, 16, 17ந்தேதிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா தலங்களில் மக்கள் அதிக அளவு கூடினால், கொரோனோ நோய் தொற்று ஏற்படும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply