“தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது!”: கமல்ஹாசன்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் சட்டப்பேரவையைல் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 2-வது நாள விவாதம் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவெற்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெலியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.