இதுக்கு ஒரு முடிவு இல்லையா?.. தொடரும் வினோத உணவு கலவைகள்!

சாலையோர வியாபாரி ஒருவர் சமோசாவுடன்,  மஞ்சூரியனை கலந்து தரும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான  நிலையில் சுவைக்கான பேரழிவு என நகைச்சுவையாக பல கருத்துகளை பார்வையாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  சமீப காலமாகவே வினோத உணவு கலவைகள்…

சாலையோர வியாபாரி ஒருவர் சமோசாவுடன்,  மஞ்சூரியனை கலந்து தரும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான  நிலையில் சுவைக்கான பேரழிவு என நகைச்சுவையாக பல கருத்துகளை பார்வையாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

சமீப காலமாகவே வினோத உணவு கலவைகள் மக்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.  குலோப் ஜாமுன் பர்கர்,  குலோப் ஜாமுன் சமோசா,  ஐஸ்கிரீம் மசாலா தோசை,   ஐஸ்கிரீம் நூடுல்ஸ் ஆகியவை இதில் குறிப்பிடதக்கவை. இதனைத் தொடர்ந்து இட்லி ஐஸ்கிரீம் கலவை அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் தற்போது சமோசா மஞ்சூரியன் உணவுக் கலவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுவாகவே சமோசா மற்றும் மஞ்சூரியன் மக்களுக்கு பிடித்த ஒன்றாகும்.  ஆனால், சாலையோர வியாபாரி ஒருவர் இதை இரண்டையும் கலந்து ஒரு புதுவித உணவுக்கலவையை வழங்குகிறார்.  இந்த வீடியோவை சாய் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  கடந்த 10 ஆம் தேதி பகிர்ந்த இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளரக்ளை கடந்துள்ளது.  இதற்கு பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அதில் சில கருத்துகளை காண்போம்.

  • வாந்தி வருகிறது
  • இல்லை வேண்டாம்
  • இதற்கான தண்டனை நிச்சயம் கிட்டும்
  • சுவையின் பேரழிவு

என பலர் பதிவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.