துணிவு திரைப்படத்தில் நடித்த “ரிதுராஜ் சிங்” திடீர் மறைவு | பிரபலங்கள் இரங்கல்…!

பாலிவுட் நடிகர்  ரிதுராஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இந்தியில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தவர் ரிதுராஜ் சிங். ‘ஹம்ப்ட்டி ஷர்மா கி துல்ஹனியா’,  ‘சத்யமேவே ஜெயதே 2’,  ‘யாரியான் 2’…

பாலிவுட் நடிகர்  ரிதுராஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்தியில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தவர் ரிதுராஜ் சிங். ‘ஹம்ப்ட்டி ஷர்மா கி துல்ஹனியா’,  ‘சத்யமேவே ஜெயதே 2’,  ‘யாரியான் 2’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.  இதுதவிர,  ஏராளமான சீரியல்களிலும் ரிதுராஜ் நடித்துள்ளார்.  கடைசியாக ‘இண்டியன் போலீஸ் ஃபோர்ஸ்’ வெப் தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில்,  இன்று அதிகாலை 12.30 மணியளவில் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹன்சல் மேத்தா இரங்கல்:

“ரிதுராஜ்!!!! இந்த செய்தியை நம்ப முடியவில்லை!  நாங்கள் நல்ல நண்பர்கள். எங்கள் நட்பு நீண்ட காலமாக உள்ளது.”  எனக்கு இப்போது இனிமையான நினைவுகள் மட்டுமே உள்ளன. நீங்கள் திடீரென்று மிக விரைவில் சென்றுவிட்டீர்கள்.”

வருண் தவான் இரங்கல்:

ரிதுராஜ் சார், அவருடன் பணிபுரிந்தது ஒரு சிறந்த நேரம், நான் அவரை சில மாதங்களுக்கு முன்பு பேபி ஜான் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தேன். ஓம் சாந்தி.

 

 

விவேக் அக்னிஹோத்ரி இரங்கல்: 

ரிதுராஜ், என் நண்பரே, இது எப்படி நடக்கும்? கலைஞர்கள் ஒருபோதும் இறக்க மாட்டார்கள். ஓம் சாந்தி.’

அர்ஷத் வர்சி இரங்கல்: 

ரிதுராஜ் மறைவு செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். நாங்கள் ஒரே கட்டிடத்தில் வாழ்ந்தோம், தயாரிப்பாளராக எனது முதல் படத்தில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். ஒரு நண்பரையும் சிறந்த நடிகரையும் இழந்துவிட்டேன்…உன்னை இழந்துவிட்டேன் சகோதரா…

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.