முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தலைவரானார் ஐசரி K. கணேஷ்

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரைப்பட தயாரிப்பாளரான ஐசரி K. கணேஷ் வெற்றி பெற்றுள்ளார். 

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல், இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி K. கணேஷ் போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரியவை வீழ்த்தி, அவர் அமோக வெற்றி பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐசரி K. கணேஷ், திரைப்பட தயாரிப்பாளராகவும், பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராகவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் விளங்குகிறார்.

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தலில், ஐசரி K. கணேஷ்க்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர். மேலும் Dr. ஐசரி K. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ’வென்று வா வீரர்களே’ பாடல் வெளியீடு

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் புதிதாக 2,775 பேருக்கு கொரோனா

EZHILARASAN D

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

Jayasheeba