“தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” – கனிமொழி எம்.பி

புதிய தலைமைச் செயலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது குறித்து விவரங்கள் இல்லை என்றால் இடத்தைத் தேர்வு செய்தது யார்? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புதிய தலைமைச் செயலகம் அமைக்க பட்டினப்பாக்தை தேர்வு செய்ய ஏதாவது ஆய்வு நடத்தப்பட்டதா, எதன் அடிப்படையில் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. என்றும் புதிய தலைமைச் செயலகம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்ட இடங்களின் விவரங்கள் குறித்தும் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இது குறித்த தகவல் இப்பொது அதிகார அமைப்பில் இல்லை பதிலளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது குறித்து விவரங்கள் இல்லை என்றால் இடத்தைத் தேர்வு செய்தது யார்? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.

அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜய் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.