ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

ஆசிய பாரா விளையாட்டின் பேட்மிண்டன் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் வெண்கலப் பதக்கங்களை வென்றதற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

ஜப்பானின் ஆய்ச்சி – நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல பிரிவுகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனைகள் வெவ்வேறு பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிற 5th Asian Para Games-இல் Badminton Mixed Doubles SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நித்யஸ்ரீ சிவனுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். Women’s Single SU5 பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் தற்போதைய Asian Para Games-ல் 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ள மனிஷா ராமதாஸுக்கும் என் பாராட்டுகள்.

தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களைக் குவித்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தரும் மனிஷா மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் மென்மேலும் சாதனைகள் படைக்க என் அன்பும் வாழ்த்தும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.