இயக்குநர் ஷங்கர் செய்தது நியாயமா? என்று கார்த்தி படக்குழு தவிப்பில் இருப்பதாக பரபரப்பு பேச்சு கிளம்பி இருக்கிறது சினிமா வட்டாரத்தில்.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கும் படம், ’விருமன்’. இதில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். தாவணி அணிந்த அதிதியின் புகைப்படங்களை படக்குழு, சமீபத்தில் வெளி யிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஷங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற் கான பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது தன் மகள் அதிதியுடன் அங்கு கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர், தன் மகள் மற்றும் இயக்குநர் ராஜமவுலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.
இந்தப் புகைப்படத்தைக் கண்ட ’விருமன்’படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதாவது விருமனில் கிராமத்து லுக்கில் அதிதி நடிப்பதால், படம் முடியும்வரை அதே ’மூட்’-ஐ கொண்டு செல்ல படக்குழு விரும்பியது.
பொதுவாக படக்குழுவினர், படத்தின் தொடக்கத்தில் அப்படி ஒரு வாய்மொழி ஒப்பந்தம் கூட போடுவார்கள். அதாவது தாவணி கெட்டப்பில் அறிமுகமாவதால், படம் முடியும் வரை சினிமா தொடர்பான விழாக்களுக்கு அதுபோன்ற லுக்கில் வருமாறு சொல்வது வழக்கம்.
இயக்குநர் ஷங்கர், ’அந்நியன்’ படத்தை இயக்கியபோது, அதில் ஹோம்லி கேரக்டரில் நடித்தார் சதா. அதனால், அந்தப் படம் முடியும்வரை மாடர்ன் உடையுடன் விழாக்களுக்கு வரக்கூடாது என்றும் அதே ஹோம்லி லுக்கை மெயின்டெயின் பண்ண வேண்டும் என்றும் அவர் கூறியதாக அப்போது சொல்வார்கள்.
ஆனால், அதற்குள் மாடர்ன் உடையில் அதிதியை விழாக்களுக்கு ஷங்கர் அழைத்துச் சென்றதை விருமன் டீம் விரும்பவில்லையாம். ஒரு டாப் இயக்குநரே இப்படி செய்யலாமா? என தவித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள், பரபரப்பாக!