காங்கிரஸில் மீண்டும் இணையப் போகிறாரா விஜயசாந்தி?

தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் நடிகை விஜயசாந்தி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி,  கடந்த 1998-ஆம் ஆண்டு முதன்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல்…

தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் நடிகை விஜயசாந்தி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி,  கடந்த 1998-ஆம் ஆண்டு முதன்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பாரதிய ராஷ்டிர சமிதி,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி,  2020-ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில்,  தெலங்கானாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால்,  அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே,  பாரதிய ராஷ்டிர சமிதியிடம் இருந்து தெலங்கானா மக்களை காங்கிரஸ் தான் காப்பாற்ற வேண்டுமென்று எக்ஸ் பக்கத்தில் விஜயசாந்தி பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/vijayashanthi_m/status/1719727620756283486

இந்த பதிவின் மூலம், பாஜகவில் இருந்து விலகும் விஜயசாந்தி காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.