‘இது ஒரு வாழ்வா? சாவா? போராட்டம்’ – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

இது ஒரு வாழ்வா? சாவா? போராட்டம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில…

இது ஒரு வாழ்வா? சாவா? போராட்டம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், காணொலி காட்சி வாயிலாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

இந்தியா மிகச் சிரமத்தில் உள்ளது. பிற்போக்குவாதிகளை அப்புறப்படுத்துவது எளிதல்ல, தேசத்தை முன்னேற்ற நம் செயல்பாடு இருக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரம் இல்லாத போது நாம் வெற்றி பெற்றோம். இதை நாம் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் செய்ய வேண்டும். இது ஒரு வாழ்வா? சாவா? போராட்டம். மாபெரும் வெற்றியை அடையச்செய்ய வேண்டும் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நல்லக்கண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், சிராவயலில் காந்தி – ஜீவா சந்தித்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கும் அறிவிப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா; மிஸ்பண்ணிடாதீங்க… இன்று கடைசி நாள்!’

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

எங்களிடையே வண்ணங்கள் மாறுபடலாம். ஆனால், எண்ணங்கள் ஒன்றுதான். திருப்பூரில் கூடிய கூட்டணி மாநாடு அல்ல 2024 தேர்தலில் பாஜக ஆட்சியேறக் கூடாது என்பதை ஆய்வு செய்வதற்கான துவக்கம். பொய்யைப் பரப்ப ஒரு தொழிற்சாலை வைத்திருக்கிறார்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பொய்யைப் பரப்பி வருகிறார்கள். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனத் தெரிவித்த அவர், இந்திய அளவில் தன்முனைப்பு இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும், அதில் கம்யூனிஸ்ட்களின் பங்கு முக்கியமானது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.