‘டெல்லி காவல்நிலையம் முன்பு கூட்ட நெரிசலில் தடியடி நடத்திய போலீசார்’ என வைரலாகும் காணொளி உண்மையா?

காவல் நிலையம் முன்பு கூட்ட நெரிசல், அலறல் காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகிறது. சில போலீசார் மக்களை தடிகளால் அடிப்பதைக் காணலாம். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

Is the viral video of 'police lathi-charge a crowd in front of the Delhi Police Station' true?

This News Fact Checked by ‘AajTak

காவல் நிலையம் முன்பு கூட்ட நெரிசலும், அலறலும் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், போலீசார் சிலரை தடிகளால் அடிப்பது போல் தெரிகிறது. மேலும், சிவில் உடை அணிந்த சிலர் கைகளில் தடிகளை ஏந்தியிருப்பது போல் தெரிகிறது. இந்த வீடியோ டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ என்று சில சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, இன்ஸ்டாகிராமில் வைரலாகும் இந்த வீடியோவில் “ஆஜ் சுபா” மற்றும் “டெல்லி மே ஹுவா சப்சே படா ஹக்தா” என்ற தலைப்புகள் உள்ளன. இது ஜனவரி 27, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவின் காப்பகப் பதிப்பை இங்கே காணலாம்.

இது ஜனவரி 6, 2025 அன்று குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் காணொளி என்றும், டெல்லியில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.