This News Fact Checked by ‘Vishvas News’
ரயில் விபத்துகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், குஜராத்தில் 350 பேர் உயிரிழந்தனர் மற்றும் 580 பயணிகள் காயமடைந்தனர் என ரயில் விபத்தைக் காட்டுவதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தடம் புரண்ட ரயில், இயந்திரம் மற்றும் பெட்டிகள் கவிழ்ந்திருப்பதைக் காட்டுகிறது.
இதுகுறித்த விசாரணையில், வைரலாகும் கூற்று தவறானது என்றும், சமீபத்தில் குஜராத்தில் இதுபோன்ற ரயில் விபத்து எதுவும் நடக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த வைரல் காணொளி ஜூலை 2024 இல் ஜார்க்கண்டில் நடந்த ஒரு ரயில் விபத்தின் வீடியோ ஆகும், இதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.
வைரல் பதிவு:
‘rajesh_pandit_06’ என்ற த்ரெட் பயனர் பிப்ரவரி 11 அன்று, காணொளியை (காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு) பகிர்ந்துள்ளார்.
“குஜராத்தில் ஒரு பெரிய விபத்து, 350 பேர் இறந்தனர், 580 பேர் காயமடைந்தனர், முழு ரயிலும் கவிழ்ந்தது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலாகும் கூற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டை கூகுள் லென்ஸ் தேடல் மேற்கொள்ளப்பட்டது. இது ஜூலை 30, 2024 அன்று வெளியிடப்பட்ட அவென்யூ மெயில் இணையதளத்தில் தொடர்புடைய செய்தி அறிக்கைக்கு எங்களை இட்டுச் சென்றது , அதில் ரயில் விபத்து பற்றிய படமும் அடங்கும். அறிக்கையின்படி, ஜூலை 30 அன்று சக்ரதர்பூர் பிரிவின் பாராபம்பு நிலையம் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி மும்பை மெயில் தடம் புரண்டது, இதன் விளைவாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
செய்திகளில் உள்ள படத்தையும், வைரலான காணொளியின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகுப்பாய்வு செய்தால், இரண்டு படங்களும் ஒரே ரயில் விபத்தை சித்தரிக்கின்றன என்பது தெளிவாகிறது.
ரயில் விபத்து குறித்த காணொளியை மணி கன்ட்ரோலின் யூடியூப் சேனலில் ஜூலை 30, 2024 அன்று பதிவேற்றிய செய்தி அறிக்கையில் காணலாம். அறிக்கையின்படி, ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது மற்றும் விபத்தில் இரண்டு பேர் இறந்தனர்.
அடுத்து, தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் தேடலை மேற்கொண்டதில், டிசம்பர் 24, 2024 அன்று, குஜராத்தின் கிம் என்ற இடத்தில் தாதர்-போர்பந்தர் சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸின் பயணிகள் அல்லாத பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டன. இருப்பினும், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
#WATCH किम, गुजरात: दादर-पोरबंदर सौराष्ट्र एक्सप्रेस के पटरी से उतरने के बाद बहाली का काम जारी है।
इंजन के बगल में लगे गैर-यात्री कोच (VPU) के चार पहिए पटरी से उतर गए थे। pic.twitter.com/hNGfCgKlJ8
— ANI_HindiNews (@AHindinews) December 24, 2024
இறுதியாக, தவறான கூற்றுடன் வீடியோவைப் பகிர்ந்த த்ரெட் பயனரின் சுயவிவரத்தை ஸ்கேன் செய்ததில், அந்தப் பயனருக்கு 100 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.
முடிவு:
குஜராத்தில் சமீபத்தில் எந்த ரயில் விபத்தும் நடக்கவில்லை. ஜார்க்கண்டில் நடந்த ரயில் விபத்து தொடர்பான பழைய காணொளி தவறான கூற்றுகளுடன் தவறாகப் பகிரப்படுகிறது.










