‘பெண்களுடன் நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by ‘Newsmeter’ சமூகவலைதளங்களில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெண்களுடன் நடனமாடும் காட்சி என்று வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஓய்வுபெற்ற இலங்கை அணியின்…

Is the viral post about 'former cricketer Muttiah Muralitharan dancing with women' true?

This news Fact Checked by ‘Newsmeter

சமூகவலைதளங்களில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெண்களுடன் நடனமாடும் காட்சி என்று வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ஓய்வுபெற்ற இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெண்களுடன் நடமாடுவதாக சமூக வலைதளங்களில் (காணொலி 1காணொலி 2 – Archive) இருவேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன.

உண்மை சரிபார்ப்பு:

சவுத் செக்கின் ஆய்வில் இது தவறான தகவல் என்றும் காணொலியில் இருப்பவர் நடனக் கலைஞர் என்றும் தெரியவந்துள்ளது.

முதலில் முத்தையா முரளிதரன் இவ்வாறு நடனம் ஆடினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, இரண்டு காணொலிகளையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்க்கப்பட்டது. அப்போது, வைரலாகும் இரண்டு காணொலிகளையும் (காணொலி 1காணொலி 2Kiran Jopale என்ற நடனக் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் நடனக் கலைஞரின் தோற்றமும், முத்தையா முரளிதரனின் தோற்றமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் இவரை முத்தையா முரளிதரன் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் அறிய முடிந்தது.

முடிவு:

பெண்களுடன் சேர்ந்து நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்று வைரலாகும் காணொலியில் இருப்பவர் நடனக் கலைஞரான Kiran Jopale என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.