“இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்?” என்ற மேற்கோளுடன் பரவிவரும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘Factly’ “இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்?” என்ற மேற்கோள் மற்றும் ABP Live என்ற லோகோவும் வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ABP…

Is the post circulating with the quote, "Why do Hindu women die for Muslim men?" true?

This News Fact Checked by ‘Factly’

“இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்?” என்ற மேற்கோள் மற்றும் ABP Live என்ற லோகோவும் வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ABP Live என்ற லோகோவுடன் “இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்” என்ற தலைப்புடன் அட்டைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்த உண்மை சரிபார்ப்பின் அடிப்படையில் இந்த அட்டைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு:

உரிமைகோரலைச் சரிபார்க்க, Google-ல் தேடல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ABP செய்திகளின் சமூக ஊடக வலைத்தளங்களில் “இந்து பெண்கள் ஏன் முஸ்லிம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்” என்ற தலைப்பில் செய்தி அறிக்கைகள் அல்லது பதிவுகள் எதுவும் வெளியாகிவில்லை. மேலும், ஸ்கிரீன் ஷாட் AI-ஆல் உருவாக்கப்பட்டதாக சந்தேகித்து, ஹைவ் AI டிடெக்டர் கருவி மூலம் சரிபார்க்கப்பட்டது. இது 99.8% AI-ஆல் உருவாக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது.

மேலும் இதுகுறித்து சரிபார்க்க, ட்ரூ மீடியா என்ற மற்றொரு கருவி பயன்படுத்தப்பட்டது. இந்த கருவி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஸ்கிரீன் ஷாட் உருவாக்கப்பட்டுள்ளது என்று பரிந்துரைத்தது.

மேலும், கூடுதலாக 13 நவம்பர் 2024 தேதியிட்ட ஏபிபி நியூஸ் வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்புக் கட்டுரை கண்டறியப்பட்டது. இது ஏபிபி நியூஸ் என்ற பெயரில் முஸ்லிம்களைப் பற்றிய போலி அட்டைப்படம் வைரலாகி வருகிறது என்பதை தெளிவுபடுத்தியது.

முடிவு:

ABP செய்திகள் “இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்” என்ற தலைப்பில் எந்த அறிக்கையையும் சமூக ஊடக இடுகைகளையும் வெளியிடவில்லை. சுருக்கமாக, ABP லைவ் லோகோவுடன் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட் “இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்” என்ற தலைப்புடன் பகிரப்படுவது AI-ஆல் உருவாக்கப்பட்டது என நிருபனமானது.

Note : This story was originally published by ‘Factly’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.