விரைவில் தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனம்?

தமிழக வெற்றி கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில்,…

தமிழக வெற்றி கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், சமீபத்தில் நடந்த அக்காட்சியின் முதல் மாநில மாநாடு பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்கள் குறித்த ஆலோசனையை அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் செய்ததாகவும், விரைவில் மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களுக்காக இறக்கிறார்கள்?” என்ற மேற்கோளுடன் பரவிவரும் பதிவு உண்மையா?

பெரும்பாலும் விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் தான் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், ஏற்கனவே அவர்களிடம் இன்டர்வியூ எடுத்து, எந்தெந்த மாவட்டத்திற்கு யார் யார் செயலாளர்கள் என்பது குறித்த முடிவை அக்கட்சி தலைவர் விஜய் எடுத்து விட்டதாகவும், டிசம்பர் முதல் வாரத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.