ஊட்டச்சத்தை உறுதிசெய் | தமிழ்நாட்டின் நலன் கருதி தொடங்கிய திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நலன் கருதி ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் தொடங்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் பொருட்டு, ரூ.22 கோடியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் 2வது தொகுப்பை…

தமிழ்நாட்டின் நலன் கருதி ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் தொடங்கப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் பொருட்டு, ரூ.22 கோடியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் 2வது தொகுப்பை அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரம் வாரணாசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கிருந்த உணவு பொருட்கள் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன், சிவசங்கர், எம்.பி.க்கள் திருமாவளவன், ஆர்.ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : மகாராஷ்டிராவில் ரூ.5கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ – தற்போதையதுதானா? | #FactCheck

இதையடுத்து, ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :

” அரசியல், தேர்தல், வாக்குகள் போன்றவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அடுத்த அரைநூற்றாண்டுக்கான தமிழ்நாட்டின் நலன் கருதி நான் தொடங்கியதுதான் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம். தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களாகக் கண்டறியப்பட்டவர்களில் 77.3 விழுக்காடு குழந்தைகளை இயல்புநிலைக்கு உயர்த்தி வெற்றிகண்ட அந்த மகத்தான திட்டத்தின் இரண்டாவது தொகுப்பு வாரணவாசியில் இருந்து தொடங்குகிறது”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.