நடிகர்கள் 100 கோடி, 50 கோடி சம்பளம் வாங்குவது சரியா? என இயக்குனர் வேலு
பிரபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
’ஜாங்கோ’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில்
நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனர் மனோ கார்த்திகேயன், நடிகை
மிருணாளினி ரவி, நாயகன் சதீஷ், இயக்குனர் வேலு பிரபாகரன், இயக்குனர் கௌரவ் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இசை தட்டை
வெளியிட, படக்குழுவினர் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர், மேடையில் பேசிய தனஞ்செயன் , திரையரங்கு இல்லாமல் சினிமா இல்லை. அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து சினிமா பார்க்க வேண்டும். சினிமா துறை மேலும் முன்னேற கட்டாயம்
அனைவரும் திரையரங்கில் படத்தை பார்க்க வேண்டும் என்றார்.
இயக்குநர் வேலு பிரபாகரன் பேசும்போது, ஹீரோக்கள் ரூ.100 கோடி, 50 கோடி சம்பளம் வாங் குவது சரியா? என கேள்வி எழுப்பினார். நம் நாடு ஏழை நாடு என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித் துள்ளார்.