பிசினஸ் கிளாசில் எறும்பு: பூடான் இளவரசர் செல்ல இருந்த லண்டன் விமானம் மாற்றம்

விமானத்தில் எறும்புகள் இருந்ததால், பூடான் இளவரசர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் மாற்றப்பட்டது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமனாம் ஒன்று இன்று மாலைப் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் முதல்…

விமானத்தில் எறும்புகள் இருந்ததால், பூடான் இளவரசர் செல்ல இருந்த ஏர் இந்தியா
விமானம் மாற்றப்பட்டது.

டெல்லியில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமனாம் ஒன்று இன்று மாலைப் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் முதல் வகுப்பில் பூடான் இளவரசர் உட்பட பலர் பயணம் செய்ய காத்திருந்தனர். சில தொழிலதிபர்களும் இருந்தனர்.

அப்போது எறும்புகள் அங்கு கூட்டமாகச் சென்றதைக் கண்ட அவர்கள், இதுபற்றி விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்தனர். அவர்கள் ஏர் இந்தியா அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பிறகு வேறு விமானம் ஏற்பாடு செய்யப் பட்டு அதில் பூடான் இளவரசர் உட்பட பயணிகள் ஏறினர். பின்னர் அந்த விமானம் சிறிது நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.