முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாட்டில் உணவு, மருந்துபொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதையடுத்து இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கடந்த மாதம் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ உதவியுடன் தப்பி அண்டை நாடான மாலத்தீவிற்கு சென்றதகாவும், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் சில வாரங்கள் தங்கிய கோத்தபய ராஜபக்சே பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர் இலங்கையை விட்டு தப்பியோடிய பிறகு மக்களின் முன்பு தோன்றவும் இல்லை, எந்த கருத்தையும் அவர் கூறவில்லை. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கைக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக் வானூர்திகள் கொள்ளவு தொடர்பான ஊழல் வழக்கு தொடர்ந்தால், என்னைவிட கோத்தாபாயவுக்கே அதிக பிரச்சினைகள் ஏற்படும் என்று வீரதுங்க தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் வீரதுங்க கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்கள் ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







