பாமக பிரச்னைகளுக்கு திமுகதான் காரணமா? – ராமதாஸ் பரபரப்பு பேட்டி

பாமகவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்ற அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் பாமகவின் பொதுக் குழுக் கூட்டத்தில் கடந்த ஜுன் 16ம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமகவை பலவீனப்படுத்த சூழ்ச்சி நடந்துக்கொண்டிருக்கிறது. நானோ, ராமதாஸோ இந்த பிரச்னைகளுக்கு காரணம் இல்லை, திமுகதான் காரணம்” என குற்றம்சாட்டினார். இந்த நிலையில், பாமக பிரச்னை தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறுவது பொய் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சோதனையின் போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியதாவது,

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்.எல்.ஏ.க்களின் உடல்நிலை குறித்து நான் கேட்டுக்கொண்டுள்னேன். அவர்களுக்கு மருத்துவமனையில் உடல்நிலை குறித்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு உறுப்பினர்களை சந்திக்கிறார் என்றால் அது அவர் வேலை. அதனால் அவர் அதை செய்கிறார். அன்புமணி என்னிடம் மன்னிப்பு கேட்பதற்கான முடிவு போக போக தெரியும். பாமகவில் நடக்கும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறுவது பொய்”

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.