காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ஹர்திக் பாண்டியா?

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும்…

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.  ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் வீரர்கள் அணி மாறுவதும், அதிரடி மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையானது.

இதையும் படியுங்கள்:  “தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதன்படி இந்த சீசனுக்கான ஏலத்திலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.  குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார்.  மேலும் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் இருந்து,  மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது.

இந்த நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா செயல்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.