சாலைகளை தூய்மைப்படுத்துவதற்கான நவீன வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் இன்று தொடங்கி வைத்தார்.
நவீன முறையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் 30 வாகனங்களை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில்
’ மற்ற நகரங்களில் உள்ளதுபோல் அதி நவீன வாகனங்களை திருச்சிக்கு கொண்டு வந்துள்ளோம். குறிப்பாக சாலையின் ஓரங்களில் உள்ள மணல்களை இந்த வாகனம் துள்ளியமாக சுத்தம் செய்யும்.
ஒரு மணி நேரத்திற்கு 16 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு இந்த வாகனம் சுத்தம் செய்யும்’என அவர் பேசினார். இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அதிமுக குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ‘அதிமுக ஆட்சியில் நேர்மையாக தேர்தல் நடத்தினார்களா? இப்போது நடந்ததுபோல நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது’ என்று அவர் பதிலளித்தார். மேலும் ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநிலத்திற்கு 75% நிதியை வழங்கினால் மட்டுமே எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியும் என தெரிவித்த அவர்’விவசாயக் கடனை முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார், அடுத்ததாக ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக ஏற்பாடுகள் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.







