முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதற்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி இருப்பதும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையுமே காரணம். இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 589 ஆக உள்ளது. ஒரே நாளில், 23,624 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 71 ஆயிரத்து 915 ஆக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.99% ஆக உள்ளது. நாடு முழுவதும் 2,30,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 94,70,10,175 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற பாஜகவிற்கு அக்கறை இல்லை: நாராயணசாமி

குடும்ப அட்டை இல்லாமல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்: மத்திய அரசு

தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!

Vandhana