முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல கன்னட நடிகர் சத்யஜித் திடீர் மரணம்

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பிரபல கன்னட நடிகர் சத்யஜித் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

பிரபல கன்னட நடிகர் சத்யஜித். சையது நிஜாமுதீன் என்ற தனது பெயரை சத்யஜித் என்று சினிமாவுக்காக மாற்றி வைத்துகொண்ட அவர், 1986 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வந்தார்.

அப்பு, அரசு, அபி, ஆப்தமித்ரா உட்பட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வில்லன், குணசித்திரம் உட்பட பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ள இவர், கன்னட சினிமாவின் சிறந்த துணை நடிகராக விளங்கினார்.

கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரு டைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

Gayathri Venkatesan

காபூல் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி இந்தியாவில் கைதானவர்

Ezhilarasan

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan