முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு : விரைந்து செயல்பட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள 13 மாவட்டங்க ளில், விரைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. மூன்று வாரங்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி திட்டத்தில் அரசு நிர்ணயித்த இலக்கை கடந்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப் பூசி பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், வேலூர் மாவட்ட செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என தெரிவித்துள்ளார். தேனி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி பணி மிகசிறப்பாக நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ள அவர், பின் தங்கிய மாவட் டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக உயர்த்த வேண்டும் என தெரிவித் துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Saravana Kumar

விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி

Jeba Arul Robinson

வடகொரியா அதிபராக பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்த கிம்; கொண்டாட்டத்தில் மக்கள்

Niruban Chakkaaravarthi