கோமாவில் விழுந்த பெண் ஒருவருக்கு எட்டு மாதத்துக்கு பிறகு சுய நினைவு திரும்பி யுள்ளது.
எத்தியோப்பியாவை சேர்ந்த 31 வயது பெண் சிகே கெரோமி குடா (Tsige Geromi Guta). துபாயில் வீட்டு வேலைக்காக வந்த இவர், ஒரு வீட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் வேலை பார்க்கும் வீட்டுக்கு அருகில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு நாள் கதகதப்பை ஏற்படுத்துவதற்காக கரியை எரிய வைத்துவிட்டு தூங்கச் சென்றார். அதிகமாக வெளியேறிய புகையால் அவர் மயக்கமடைந்தார். கார்பன் மோனாக்சைடு அதிகமானதால் அது விஷமாகி அவர் சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது.
காலையில் அவர் வேலைக்கு வராததை அடுத்து, அவருடைய ஸ்பான்சர்கள் வீட்டின் கத வை தட்டினார். திறக்கவில்லை என்பதால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் புகை அதிகமாக இருந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பின்னர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எட்டு மாதத் துக்குப் பின் அவருக்கு இப்போது சுய நினைவு திரும்பியுள்ளது. இதுபற்றி அவருக்கு சிகிச் சை அளித்த மருத்துவர் பிரபு கூறும்போது, கோமா நிலையில் இருந்து சிகே கெரோமி மீண்டும் சுய நினைவை பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோமா நிலைக்கு சென்றவர்கள், 20 சதவிகிதம் பேர் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் விடா முயற்சியால் கெரோமியின் உடல் நிலையில் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.