2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை தான் ஆடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தோனி மற்றும் பிரெவிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டெவால்ட் பிரெவிஸ் களமிறங்குவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் படி, டெவால்ட் பிரெவிஸ், தனது உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்று, பக்கவாட்டுத் தசைப்பிடிப்பிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று இரவு டெல்லி அணிக்கு எதிராக அவர் களமிறங்கத் தயாராக உள்ளார்.
ஆனால் எம்.எஸ். தோனியைப் பொறுத்தவரை, டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடும் தகுதியுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. இருப்பினும், ஏப்ரல் 14 அன்று ஈடன் கார்டன்ஸில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெறும் சென்னையின் அடுத்த போட்டியில் தோனி இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று கூறுப்படுகிறது.
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று இரவு 7 ; 30 மணிக்கு தொடங்குகிறது.
உத்தேச அணி விவரம் :
சென்னை : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஆயுஷ் மத்ரே, டெவ்லட் ப்ரீவிஸ், சர்பராஸ் கான், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, கலீல் அகமது, மற்றும் மேட் ஹென்றி.
டெல்லி : கே.எல்.ராகுல் (வி.கீ), பதும் நிசாங்கா, கருண் நாயர், அக்சர் படேல் (கேப்டன்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, டி நடராஜன், முகேஷ் குமார்.
நேருக்கு நேர்
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 31 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் டெல்லி அணி 12 போட்டிகளிலும் சென்னை அணி 19 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளன. முக்கியமாக, கடந்த ஆண்டு சேப்பாக்கில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி, அந்த மைதானத்தில் 15 ஆண்டு கால தோல்வி வரலாற்றிற்கு டெல்லி முற்றுப்புள்ளி வைத்தது.







