ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டி மதியம் 3:30 மணிக்கு தொடங்குகிறது.
நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. இறுதியாக வான்கடே மைதானத்தில் மும்பையை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை அணிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
தோனி மீண்டும் அணிக்கு திரும்பாததற்கு இது தான் காரணமா…? – வெளியான புது தகவல்…!
மறுபுறம் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள குஜராத அணி புள்ளி பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் கில் தலைமையிலான குஜராத் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி விவரம் :
சென்னை : ருதுராஜ் கெய்க்வாட் (கே), சஞ்சு சாம்சன் (வி.கீ), சர்பராஸ் கான், டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், பிரசாந்த் வீர், முகேஷ் சவுத்ரி, மாட் ஹென்றி, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீதி சிங்.
குஜராத் : ஷுப்மன் கில் (கே), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (வி.கீ), கிளென் பிலிப்ஸ், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா.







