19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை குவித்தது. தொடர்ந்து 202 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.







