19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றது.
இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் அணி வலம் வருகிறது. விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை, ஐதராபாத், மும்பை மற்றும் குஜராத் ஆகிய வலிமையான அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் நியூ சண்டிகரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த மோதலில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. நடப்பு சீசனில் கொல்கத்தா அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை அபாரமாகத் தொடங்கியது. முதல் 4 ஆட்டங்களில் சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு என ஜாம்பவான் அணிகளை வீழ்த்தியது. ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி சற்று முன்னிலையில் உள்ளது. கொல்கத்தா 16 முறையும் ராஜஸ்தான் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.







