#IPL2026 | மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

மும்பை மைதானத்தில் இன்று மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகிறது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி மோத உள்ளன. மும்பை மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் ஆடியுள்ள மும்பை 1 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் லக்னோ மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு மோத உள்ளன. இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் 1 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.