#IPL2026 | டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!

சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் நேற்று இரவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை அணி, டெல்லியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சார் பட்டேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி பதிவு செய்துள்ள முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியை சென்னை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.