#IPL2026 | ஐதராபாத் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

ஐதராபாத்தில் நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத், பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. ஐதராபாத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் பணிந்தது.

பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வி என 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அந்த அணி கடைசி இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து சற்று சுணக்கம் கண்டுள்ளது. இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப்பிடம் மோதி அதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஐதராபாத் அணி, அதற்கு பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் ஐதராபாத்தும், 8-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.