ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாச் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் 59 ரன்களும், மற்றொரு வீரர் ஹெய்ன்ரிச் கிளாசென் 39 பந்துகளில் 59 ரன்கள் விளாசினர்.
சென்னை அணி சார்பில், அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஜாமி ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை விரட்டி களமிறங்க உள்ளது.







