இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் ; ஈரான் தூதரிடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு…!

ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 இந்திய கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்கியுள்ளது.

ஈரானின் கப்பல் போக்குவரத்தை முடக்குவதாக அமெரிக்கா அறிவித்ததால் ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் இன்று ஹர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த 2 இந்திய எண்ணெய் கப்பல்களை ஈரானின் புரட்சிகர காவல்படை துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈரானிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்கான ஈரான் தாதர் முகமது பதாலியை நேரில் அழைத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.