சமூக நீதியை படுகொலை செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு…!

தேசிய ஜனநாயக கூட்டணி சமூக நீதியை படுகொலை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் தலையெடுக்கவே முடியாது. தொகுதி மறுவரையறை பேராபத்தை நாட்டிலேயே முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது நாம் தான்.

மறுவரையறையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் அரசியல் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். மசோதா வந்ததும் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினோம். சட்ட மசோதாவை எரித்தோம்

திமுகவின் திட்டங்கள் சாதனை திட்டங்களாகத்தான் இருக்கும். நம் திட்டங்களை பிறர் காப்பியடிக்கின்றனர்.

டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று வருவது உரிமைத்தொகை, விடியல் பயணத்தை நிறுத்துவதற்காகத்தான். இட ஒதுக்கீடு உரிமையை பறித்து. சமூக நீதியை படுகொலை செய்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்த்ததாக பிரதமர் மோடி சொல்கிறார். 2023-ல் கொண்டு வந்த மசோதாவை நாம் ஆதரித்தோம். உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது திமுக.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.