19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத், லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் களமிறங்கியது.
ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து, 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து திணறியது. இறுதியில், ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. லக்னோ சார்பில் ஷமி, ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டும், திக்வேஷ் சிங் ரதி, மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.







