19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் அணி, டெல்லி அணியை எதிர்கொள்கிறது.
ஹைதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. அடுத்த இரு ஆட்டங்களில் லக்னோ, பஞ்சாப்பிடம் பணிந்தது. முந்தைய இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், சென்னையை வீழ்த்தியது.
டெல்லி அணி முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை வீழ்த்தியது. அதன் பிறகு குஜராத், சென்னை அணிகளிடம் அடங்கியது. கடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூருவுக்கு அதிர்ச்சி அளித்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 12-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.







