19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. டெல்லி அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. 5 முறை சாம்பியனான மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 13 ஆண்டுக்கு பின் பொடியை வெற்றியுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9 வது லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. குஜராத் அணி முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 2வது இடத்திலும், குஜராத் அணி 7வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.







