#IPL2026 | சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகிறது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை – கொல்கத்தா அணிகள் ஆட்டம் தொடங்குகிறது. இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை 1 வெற்றி ,3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதேவேளை 4 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா 3 தோல்வி, 1 ஆட்டம் மழையால் ரத்தால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10வது) உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் பாடுபடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.