கோவை வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!

கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்க யம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் தவெக சார் பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று மாலை திருப்பூரில் பிரசாரம் செய்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையிலிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்லும் விஜய் பெருமாநல்லூரில் பரப்புரை மேற்கொள்கிறார். பிரசாரத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வரும் சாலை மற்றும் பிரசாரம் மேற்கொள்ளும், அவினாசி, பெருமாநல்லூர், பூலுவப்பட்டி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.