#IPL2026 | குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 205 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து விராட் கோலி அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். எனவே 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை, பெங்களூரு அணி 18.5 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.