சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 160-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100- உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.800-ம், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.







