தோனி அடித்த 100வது சிக்ஸ்

நேற்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி அடித்த சிக்ஸ் தற்போது இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.…

நேற்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி அடித்த சிக்ஸ் தற்போது இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் 46 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து சென்னை அணி 2 பந்துகள் மீதம் இருக்க அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் தனது ஸ்டைலில் சிக்ஸ்ர் விளாசி Match Finisher என்ற மீண்டும் தனது பழைய பட்டத்தை புதுப்பித்து கொண்டார் கேப்டன் தோனி. அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் தோனி அடித்த 100வது சிக்ஸ் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக சற்று சொதப்பலான ஆட்டத்தை ஆடிவரும் தோனி, நேற்றைய ஆட்டத்தில் அடித்த சிக்ஸரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம், சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

– மா.நிருபன் சக்கரவர்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.