முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு: இன்று முதல் அமல்

தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உயர்வும் இன்று முதல் அமலாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடியும். விவசாயிகளிடம் இருந்து இந்திய உணவு கழகம் சார்பில் நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு குவிண்டால் (100 கிலோ) அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகிறது.

2021-22 நிதியாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவின்டாலுக்கு சன்ன ரக நெல்லுக்கு 1,960 ரூபாயும், பொது ரகத்துக்கு 1,940 ரூபாய் எனவும் மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இதனையடுத்து மாநில அரசின் ஊக்கத் தொகை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உயர்த்திடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன் காரணமாக சன்ன ரக நெல் ஒரு குவின்டால் 2,060 ரூபாய்க்கும், பொது ரக நெல் 2,015 ரூபாய்க்கும் இன்று முதல் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளி வைப்பு!

Halley karthi

அதிமுகவிற்காக களமிறங்கிய கார்த்திக்!

Niruban Chakkaaravarthi

நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம் மறைவு: முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் இரங்கல்!